உலகின் மிகப்பெரிய Mini Cooper 300 BHP பவர் உடன் அறிமுகம்!

உலகின் மிகப்பெரிய Mini Cooper 300 BHP பவர் உடன் அறிமுகம்!
By: TeamParivu Posted On: November 27, 2023 View: 82

Mini Cooper நிறுவனத்தின் கார்களிலேயே மிகப்பெரிய காரான Mini Countryman 2025 மாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஹைபிரிட் என்ஜின் இடம்பெறும். இதன் காரணமாக சிறந்த பவர் மற்றும் ரேஞ்சு கிடைக்கும்.


பிரிட்டிஷ் சொகுசு கார் நிறுவனமான Mini Cooper அதன் புதிய Countryman 2025 மாடலை வெளியிட்டுள்ளது. இந்த கார் இதுவரை வெளியான மினி கார்களிலேயே அதிக பவர் கொண்டதாக அறியப்படுகின்றது. அமெரிக்காவில் இந்த கார் 39,895 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 33.2 லட்சம் ரூபாய் ஆகும்.

கார் டிசைன்

கார் டிசைன்
இந்த கார் பார்க்க மாருதி சுசூகி 4th ஜென் ஸ்விப்ட் போலவே உள்ளது. பழைய ரவுண்டு ஹெட் லைட் நீக்கப்பட்டு மாடர்ன் LED லைட் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல Clamshell Bonnet, பெரிய அகலமான மௌத் கிரில், சில்வர் சரவுண்ட், சில்வர் பம்பர் போன்றவை உள்ளன.

மினி கூப்பர் சிறப்புக்கள்

மினி கூப்பர் சிறப்புக்கள்
கார் பார்க்க ஒரு பாக்ஸ் போன்ற அமைப்பு கொண்டுள்ளது பல இடங்களில் தனியாக பாடி கிளாடிங், பின்பக்க மினி கூப்பர் டைல் கேட் மற்றும் LED லைட், சதுரமான ரூப் ஸ்பாய்லர், சென்ட்ரல் மவுண்ட் எக்ஸாஸ்ட், பெரிய பேனரோமிக் சன் ரூப் வசதிகள் உள்ளன.

டெக் வசதிகள்

டெக் வசதிகள்
காரின் உள்ளே ஒரு பெரிய வட்டவடிவ பேசல் இல்லாத டிஸ்பிளே வசதி இருக்கிறது. இது இன்போடைன்மெண்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் வடிவிலும் வேலை செய்யும். இதன் உட்புறம் BMW நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொகுசு வசதிகளுக்கு பஞ்சம் இருக்காது.

விலை என்ன?

விலை என்ன?
2024 ஆம் ஆண்டு Countryman பேஸ் மாடலாக இருந்தது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள 2025 மாடல் காரில் Countryman S All4 பேஸ் மாடலாக உள்ளது. S என்பது அதிக பவர் கொண்ட 2.0 லிட்டர் என்ஜின் குறிப்பது. All4 என்பது ஸ்டாண்டர்ட் AWD வசதியை குறிக்கிறது. இதன் டாப் JCW வேரியண்ட் 47,895 டாலர் விலையில் (இந்தியாவில் 40 லட்சம் ரூபாய்) கிடைக்கும்.

டெலிவரி எப்போது?

டெலிவரி எப்போது?
இந்த கார் உற்பத்தி என்பது மார்ச் 2024 மாதம் தொடங்கும் எனவும் இதன் விற்பனை மே 2024 மாதம் முதல் துவங்கும் என்றும் மினி கூப்பர் கூறியுள்ளது. இந்த இரண்டு வேரியண்ட்களும் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதேபோல Countryman Electric சார் ஒன்றை மினி உருவாக்கிவருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்
இதில் புதிய 2.0 லிட்டர் என்ஜின் இடம்பெறுகிறது. இதன் பவர் இதுவரை இல்லாத அளவு 312 BHP (JCW வேரியண்ட்) வரை கிடைக்கும். ஸ்டாண்டர்ட் S All4 (241 BHP பவர்) உடன் வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு இந்தியாவில் வெளியாகும்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..