இன்று ரிலீஸாகும் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் ரன்னிங் டைம் உள்ளிட்ட தகவல்கள்!

இன்று ரிலீஸாகும் நயன்தாராவின் அன்னபூரணி படத்தின் ரன்னிங் டைம் உள்ளிட்ட தகவல்கள்!
By: TeamParivu Posted On: December 01, 2023 View: 39


திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று இப்போது மொத்த ஷூட்டிங்கும் முடிந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். படம் இன்று பெருமழைக்கு இடையே ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் அன்னபூரணி திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 26 நிமிடம் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்துக்கு அனைவரும் பார்க்கும் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..