College Superstars பாடலில் கலக்கிய கவின் ! ஸ்டார் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!

College Superstars பாடலில் கலக்கிய கவின் ! ஸ்டார் படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு!
By: TeamParivu Posted On: December 13, 2023 View: 69


நடிகர் கவின் தற்போது பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன்,  ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். லால் கவினுக்கு அப்பாவாக படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடெக்ஷன் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தின் முதல் பாடலான ‘College Superstars’ என்ற வீடியோ பாடல் படத்தில் இருந்து நேற்று வெளியானது.
இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து தன்னுடைய குரலால் பாடி இருந்தார். பாடலை மதன் கார்க்கி எழுதி இருந்தார். பாடலில் வரும் இசை மற்றும் கவின் ஆடும் நடனம் காண்போரை வெகுவாக கவர செய்தது என்றே சொல்லலாம். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதுவரை யூடியூபில் மட்டும் 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வெளியான ஒரு நாளிற்குள் 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கவினுக்கு சாதனையை கொடுத்துள்ளது. இதுவரை கவின் நடிப்பில் வெளியான படங்களின் முதல் பாடல் வெளியான ஒரே நாளில் இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றது இல்லை இதுவே முதல் முறை.  கவின் இப்போது வளர்ந்து வரும் ஒரு ஹீரோ ஆனால், அவருடைய இந்த ஸ்டார் படத்தின் முதல் பாடலுக்கே ஒரு நாளில் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து வருவது என்பது மிகப்பெரிய விஷயம்.

எனவே, இந்த பாடலின் மூலம் ஸ்டார் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. மேலும், இந்த ஸ்டார் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..