வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?

வசூலில் வேட்டை நடத்தும் சலார்! முதல் நாளில் மட்டும் இத்தனை கோடிகளா?
By: TeamParivu Posted On: December 23, 2023 View: 75


கேஜிஎப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், சரண் சக்தி, ஈஸ்வரி ராவ், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்த சலார் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாக படம் கவலையான விமர்சனத்தை பெற்று வந்தாலும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  இந்த திரைப்படம் வெளியான காரணத்தால் படம் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.

இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த சலார் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..