2023 Rewind: கடந்து செல்லாது கற்றுக்கொள்ள... திகைக்க வைத்த காலநிலை மாற்ற நிகழ்வுகள்!

2023 Rewind: கடந்து செல்லாது கற்றுக்கொள்ள... திகைக்க வைத்த காலநிலை மாற்ற நிகழ்வுகள்!
By: TeamParivu Posted On: December 28, 2023 View: 64

காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கத்தை 2023 சந்தித்துள்ளது. வரலாற்றிலேயே மிக வெப்பமான கோடை தொடங்கி கடல் மேல்பரப்பு வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவில் பதிவானது வரை பல தாக்கங்களை இந்த ஆண்டு சந்தித்துவிட்டது. ‘எல் நினோ’ ஆண்டு என்பதாலேயே மிக்ஜாம் புயலின் தாக்கமும், தென் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையும் பதிவானது என்ற தகவல்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணங்கள். இவை வெறும் உதாரணங்களாக கடந்து செல்வதற்காக அல்ல என்பதற்காகவே 2023 காலநிலை மாற்ற தாக்கம் தொடர்பான நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்.
மிகவும் வெப்பமான ஆண்டு: 2023 தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் சராசரி வெப்பநிலை முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாகவே இருந்த நிலையில் ஆண்டு சராசரியும் அதிகரித்து வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக அறியப்பட்டுள்ளது. கோப்பர்னிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S - Copernicus Climate Change Service), அறிக்கையின்படி 2023 ஆம் ஆண்டின் சராசரி வெப்பம் 2016-ஆம் ஆண்டின் 10 மாத சராசரியைவிட 0.1 டிகிரி செல்சியஸ் அதிகம். 2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை பதிவான வெப்பநிலை தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைவிட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம். 2023 அக்டோபரில் சராசரி தரைக்காற்று வெப்பநிலையானது 15.30 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது 1991 - 2020 காலத்தின் அக்டோபர் சராசரியை ஒப்பிடுகையில் 0.85 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது. “அதனால் 2023-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டாக இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதிபடக் கூறலாம்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..