அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?

அந்த மாதிரி படத்தில் நடிக்க முடிவெடுத்த அனுஷ்கா?
By: TeamParivu Posted On: January 05, 2024 View: 36

நடிகை அனுஷ்காவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தாலும் அவருக்கு ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் தற்போது பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம்.  அதற்க்கு முக்கியமான காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய உடல் எடையை அதிகரிக்க செய்தது தான்.
இஞ்சு இடுப்பழகி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரிக்க செய்து இருந்தார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இன்னும் தனது உடல் எடையை குறைத்தபாடு இல்லை. இன்னும் சற்று உடல் எடையை அதிகரித்தது போல தான் இருக்கிறார்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சிறிய சிறிய நடிகர்களுக்கு ஜோடியாக சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் , கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. அந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக அனுஷ்கா Kathanar – The Wild Sorcerer என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மலையாளத்தில் உருவாகவுள்ளது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை அனுஷ்கா பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.  பட வாய்ப்புகள் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் அவர் தற்போது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள படத்தில் நடிக்க முடிவு எடுத்து இருக்கிறாராம்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..