“வழக்கமா நீங்க அமெரிக்காவ அழிக்கதானடா வருவீங்க” - சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ட்ரெய்லர் எப்படி?

“வழக்கமா நீங்க அமெரிக்காவ அழிக்கதானடா வருவீங்க” - சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ட்ரெய்லர் எப்படி?
By: TeamParivu Posted On: January 05, 2024 View: 36

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - “இந்த மண்ணு புழுப்பூச்சிகள் சேர்ந்தது தான்னு அப்பா சொன்னதை நம்புகிறேன்” என்ற சிவகார்த்திகேயனின் வசனத்துடன் ட்ரெய்லர் தொடங்குகிறது. இதன் மூலம் வேற்றுகிரகவாசிகள் குறித்தும், மற்ற உயிரினங்கள் மீது அன்பு கொண்ட கிராமத்து மனிதராக சிவகார்த்திகேயன் வெளிப்படுகிறார். இதற்கு மற்றொருபுறம் ஏலியன் குறித்து ஆய்வு செய்யும் கார்பரேட் வில்லன் என களம் அமைகிறது. ட்ரெய்லரில் ஹீரோவுக்கு இணையாக ஏலியனுக்கு இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. பின்னணி இசை கவனம் பெறுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..