ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!

ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!
By: TeamParivu Posted On: January 06, 2024 View: 66

நாளை (ஜனவரி 8)  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..