விஜயகாந்துக்கு ஜன.19-ல் நினைவேந்தல் கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு

விஜயகாந்துக்கு ஜன.19-ல் நினைவேந்தல் கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவிப்பு
By: TeamParivu Posted On: January 07, 2024 View: 61

சென்னை: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தன் பகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி காலமானார். அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..