இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: திருமயிலை மெட்ரோ ரயில் நிலைய ஆரம்பக்கட்ட பணி தொடக்கம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: திருமயிலை மெட்ரோ ரயில் நிலைய ஆரம்பக்கட்ட பணி தொடக்கம்
By: TeamParivu Posted On: January 08, 2024 View: 55

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், சவாலான பணிகளில்ஒன்றாக கருதப்படும் திருமயிலைமெட்ரோ ரயில் நிலைய ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறு கின்றன.
இவற்றில் 76 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 43 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் பல்வேறு இடங்களில் சுறுசுறுப்பாக நடைபெற்று வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, கலங் கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் மயிலாப்பூர் லஸ் சந்திப்புஅருகே இரட்டை சுரங்கப்பாதை யில் மிகப்பெரிய அளவில் மெட்ரோரயில் நிலையம் கட்டப் பட உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்டப் பணி தொடங்கி உள்ளது.
4,854 சதுர மீட்டர் பரப்பு: இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது மாதவரம்-சிறுசேரி சிப்காட் மற்றும் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தை இணைக்கும் வகையில், திருமயிலை மெட்ரோ ரயில் நிலையம் 4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ளது. இங்கு பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ் நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமையவுள்ளது.
இந்த நிலையங்களில் 4 சுரங்கம்தோண்டும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப் படுத்தப்பட உள்ளன. இதன் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. முன்னதாக, மயிலாப்பூர், மந்தைவெளி பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..