சென்னையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் 6 இடங்களிலிருந்து இயக்கப்படும்

சென்னையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் 6 இடங்களிலிருந்து இயக்கப்படும்
By: TeamParivu Posted On: January 09, 2024 View: 50

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் சென்னையில் 6 இடங்களிலிருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும். இதன்படி,சென்னையிலிருந்து பொன்னேரி,கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைமற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர்மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகளும் தாம்பரம்சானடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும்ஆரணி செல்லும் பேருந்துகள் வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்திலிருந்தும், பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தத்திலிருந்தும் இயக்கப்படும்.
முன்பதிவு மையங்கள்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தலா 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ்பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் என மொத்த 11முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 12-ம் தேதிமுதல் 14-ம் தேதிவரை காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை இந்த முன்பதிவு மையங்கள் செயல்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
அதிக கட்டண புகார்: மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் மற்றும் 044-24749002,044-26280445, 044-26281611 என்றதொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதுமட்டுமின்றி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்களின் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 5 பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..