பொங்கல் பண்டிகை - முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை -  முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
By: TeamParivu Posted On: January 14, 2024 View: 47

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் ஸ்டாலின்: உழவு தமிழர்களின் தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக, தமிழகத்தில் திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என சொல்லத்தக்க வகையில், திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..