முகேஷ் அம்பானி முதல் ஷாருக்கான் வரை: ஆமீர்கான் மகள் திருமண ஹைலைட்ஸ்

முகேஷ் அம்பானி முதல் ஷாருக்கான் வரை: ஆமீர்கான் மகள் திருமண ஹைலைட்ஸ்
By: TeamParivu Posted On: January 14, 2024 View: 49

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் மகள் ஐரா கான் திருமண வரவேற்பு நிகழ்வில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் ஷாருக்கான் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் ஆமிர் கானுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரீனா தத்தா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஜுனைத் கான் மற்றும் மகள் ஐரா கான். ரீனா தத்தாவை விவாகரத்து செய்தபின் இரண்டாவதாக கிரண் ராவை திருமணம் செய்த ஆமிர் கான் அவரையும் பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஆமிர் கானின் மகள் ஐரா கான் தனது காதலன் நுபுர் ஷிகாரேவை திருமணம் செய்துள்ளார். உதய்பூரில் ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை ஐந்து நாட்கள் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. முன்னதாக, ஜனவரி 3-ம் தேதியே தம்பதிகள் இருவரும் தங்கள் திருமணத்தை மும்பையில் பதிவு செய்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..