நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
By: TeamParivu Posted On: January 16, 2024 View: 38

சென்னை: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் நீலகிரியில் 2 நாட்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், இன்று 16.01.2024 மற்றும் 17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..