பிரபாஸின் ‘சலார்’ சனிக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்

பிரபாஸின் ‘சலார்’ சனிக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்
By: TeamParivu Posted On: January 19, 2024 View: 40

ஹைதராபாத்: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் நாளை (சனிக்கிழமை) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘சலார்’ பார்ட் 1: சீஸ்பயர்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இந்தப்படம் கடந்த டிச.22-ம் தேதி பான் இந்தியா முறையில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் முதல் நாளிலேயே அதிகப் பட்ச வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை பெற்றது. இந்தப் படம் 17 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்துள்ளது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..