சென்னை புத்தக காட்சி நிறைவு - 15 லட்சம் வாசகர்கள் வருகை; ரூ.18 கோடிக்கு விற்பனை

சென்னை புத்தக காட்சி நிறைவு - 15 லட்சம் வாசகர்கள் வருகை; ரூ.18 கோடிக்கு விற்பனை
By: TeamParivu Posted On: January 22, 2024 View: 36

சென்னை: சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவு பெற்றது. மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில், ரூ.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 47-வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3-ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது.விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 900 அரங்குகளில் ஏராளமான தனித்துவமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். புத்தக காட்சிக்கு ஆர்வத்துடன் வருகை தந்த பொதுமக்கள், புத்தகங்களை வாங்கி செல்வதுடன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவு அரங்குகளில் விதவிதமான உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர்.
இவ்வாறு சிறப்பாக நடைபெற்று வந்த சென்னை புத்தக காட்சி நேற்று நிறைவுபெற்றது. கடைசி நாளையொட்டி காலை முதலே வாசகர்கள் கூட்டம் அலைமோதியது. தங்களுக்கு வேண்டிய புத்தக்கங்களை ஓட்டமும் நடையுமாக மக்கள் வாங்கி சென்றனர்.
பதிப்பகங்களுக்கு பரிசு: இந்த ஆண்டு மொத்தம் 19 நாட்கள் சென்னை புத்தக காட்சி நடைபெற்றது. 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்தனர். சுமார் ரூ.18 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. வருகை தந்தவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிப்பு பணியில் 100 ஆண்டு நிறைவு செய்த கடலங்குடி பதிப்பகத்துக்கும், 100 ஆண்டுகள் நிறைவு செய்த பதிப்பாளர் எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம் - யுனிவர்சல் பப்ளிஷர்ஸுக்கும் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து பதிப்பு பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த 10 பதிப்பகங்களுக்கும், 25 ஆண்டுகள் நிறைவு செய்த 22 பதிப்பகங்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..