அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்… எந்த படத்தில் தெரியுமா?

அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்… எந்த படத்தில் தெரியுமா?
By: TeamParivu Posted On: January 24, 2024 View: 52

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை.

ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகாவை கதாநாயகி ஆக்கி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக ஒரு வெப் சீரிஸை இயக்கினார். ஆனால் அந்த தொடரும் வெற்றி பெறவில்லை.

இப்போது ஜெயம் ரவி இயக்கத்தில் அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் தன்னுடைய முதல் பட பாணியில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை உருவாக்க உள்ளாராம். அந்த படத்தில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விருமன் மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அதிதி ஷங்கருக்கு பெரியளவில் வாய்ப்புகள் வராத நிலையில் இந்த படத்தில் கமிட்டாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..