பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் நாமினேஷன்… சாதனைப் படைத்த மார்ட்டின் ஸ்கார்ஸேஸி!

பத்துக்கும் மேற்பட்ட ஆஸ்கர் நாமினேஷன்… சாதனைப் படைத்த மார்ட்டின் ஸ்கார்ஸேஸி!
By: TeamParivu Posted On: January 24, 2024 View: 45

ஆண்டுதோறும் அமெரிக்காவின் உயர்ந்த திரைப்பட விருதுகளாக ஆஸ்கர் விருதுகள் பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படுகின்றன.  இந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்வை ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் 96 ஆவது ஆஸ்கர் விருதுகள் நிகழ்வுகளுக்கு இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஓப்பன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன், பார்பி, பாஸ்ட் லைவ்ஸ் ஆகிய படங்கள் அதிக பிரிவுகளில் தேர்வாகியுள்ளன.

மார்ட்டின் ஸ்கார்ஸேஸி இயக்கத்தில் லியானார்டோ டி காப்ரியோ மற்றும் ராபர்ட் டி நீரோ ஆகியவர்கள் நடித்த ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ திரைப்படம் சிறந்த இயக்குனர் உட்பட 10 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வாழும் நபர்களில் அதிகமான முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் என்ற சாதனையை மார்ட்டின் ஸ்கார்சேஸி படைத்துள்ளார். இதுவரை 25 படங்கள் மற்றும் 16 ஆவணப்படங்களை மார்ட்டின் ஸ்கார்சேஸி இயக்கியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..