தேர்தலால் தள்ளிப் போகும் விக்ரம்மின் தங்கலான் திரைப்படம்?

தேர்தலால் தள்ளிப் போகும் விக்ரம்மின் தங்கலான் திரைப்படம்?
By: TeamParivu Posted On: February 05, 2024 View: 23

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதுவரை இந்த டீசரை ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாத காரணத்தால் எதிர்பார்த்தது போலவே தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது ஏப்ரல் மாதமும் ரிலீஸ் ஆகாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதன் காரணமாக தங்கலான் திரைப்படம் மேலும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..