அனைத்தையும் 12 பெட்டி ரயில்களாக மாற்ற வேண்டும்: சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை

அனைத்தையும் 12 பெட்டி ரயில்களாக மாற்ற வேண்டும்: சென்னை - அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை
By: TeamParivu Posted On: February 05, 2024 View: 19

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில், கூட்ட நெரிசலை தவிர்க்க 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்களுக்கு பதிலாக, 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “12 பெட்டிகள் கொண்ட புதிய மின்சார ரயில்கள் வரும்போது, சென்னை மற்றும் புறநகரில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் படிப்படியாக நீக்கப்படும்" என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புறநகர் ரயில் சேவை சென்னையில் பொது போக்குவரத்தின் இதயமாக புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து உள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மூர் மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப் பூண்டி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தினசரி 670-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயங்குகின்றன.இதில், சென்னை மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தடத்தில் 350-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் தினசரி இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த வழித்தடத்தில் முன்பு, 8 பெட்டிகளைக் கொண்ட ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2018-ம் ஆண்டு 12 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, 2 ஆண்டுகளுக்குள் இந்த வழித்தடத்தில் அனைத்து ரயில்களும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை அனைத்து ரயில்களும் 12 பெட்டிகளைக் கொண்ட ரயில்களாக மாற்றப்படவில்லை. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அரக்கோணம், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அலுவலக நேரங்களில் (பீக் அவர்ஸில்) 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில்களும், 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்களும்தான் அடிக்கடி இயக்கப்படுகின்றன.
இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நின்று செல்லும் வகையில் நடைமேடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் 8 அல்லது 9 பெட்டி ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இடப்பற்றாக்குறையால் பயணிகள் சிலர் படியில் தொங்கி, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். சிலர் கீழே விழுந்து படுகாயமடைகின்றனனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..