சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம்...!

சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம்...!
By: TeamParivu Posted On: July 30, 2022 View: 82

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் கரங்கள் மற்றும் Round Table India Association இணைந்து நடத்தும் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால், காவல் கரங்கள் உதவி மையம் கடந்த 21.04.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த உதவி மையம் மூலம், சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்களை பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 2,533 ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2,042 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 247 பேர் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டும், 244 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும், உரிமை கோரப்படாத 1,105 இறந்த உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் உதவி மையம் சேவை செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து காவல் கரங்கள் உதவி மையம் மற்றும் Round Table India- Madras Knights Round Table 181 Association உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அவர்களது குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கும், ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (30.07.2022) சென்னை, வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு சென்னை பெருநகர காவல் துறையினர். ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச கண் மருத்தவ பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்த இலவச கண் மருத்துவ முகாமில் MN கண் மருத்துவமனையைச் சேர்ந்த 6 மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர், கண் பரிசோதனைகள் மேற்கொண்டு, கண் நோயால் பாதிக்கப்பட்ட காவல் துறையை சேர்ந்த 52 நபர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர்.ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்) அவர்கள் மற்றும் காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி. சாமூண்டீஸ்வரி இ.கா.ப, தலைமையிடம், காவல் துணை ஆணையாளர்கள், அதிகாரிகள், Round Table India அசோசியேஷன் துணை தலைவர் திரு.சஞ்சய் சுதர்சன், M.N. மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் திரு.நிவின் மதிவாணன், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:
#சென்னை  # காவல் ஆளிநர்கள்  # இலவச கண் பரிசோதனை முகாம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..