அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மோசடி: துணையாக இருந்த 5 அரசு அதிகாரிகள் கைது..!

அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மோசடி: துணையாக இருந்த 5 அரசு அதிகாரிகள் கைது..!
By: TeamParivu Posted On: August 03, 2022 View: 89

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் விட்டுமனை பிரிவுகளை பொது பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மோசடி செய்ததற்கு துணையாக இருந்த 5 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வடகால் எ, பி, மற்றும் பால்நல்லூர் கிராமங்களில் விஜிபி நிறுவனத்தால் வினோத் நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவுகள் அமைக்கப்பட்டது. இதனை பொது பயன்பாட்டிற்காக 16.64 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து பொது பயன்பாட்டிற்கு வழங்கினார்.

இந்நிலையில் அந்த நிலங்களை விஜிபி அமலதாஸ் ராஜேஷ் என்பவர் மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. பொது உபயோகத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்து அதற்கு உடந்தையாக செயல்பட்ட இந்தி சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் ராஜதுரை, காஞ்சிபுரம் நில எடுப்பு பிரிவு வட்டாச்சியர் எழில் வளவன், ஸ்ரீ பெரும்புதூர் ஆதிதிராவிட நலத்துறை வாட்சியார் பார்த்தசாரதி மற்றும் உதவியாளர் பெனடின், ஆகியோர் மீதி காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் இதுபோல் அரசு நிலத்தை மோசடி செய்த செயல் ஆட்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர். மோசடி செய்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி என கூறப்படுகிறது. அரசு நிலத்தை மோசடி செய்த வழக்கில் அமலதாஸ் ராஜேஷ் கைது செயப்பட்டதும், அதற்கு உதவியாக இருந்த இரு சார்பதிவாளர்கள் சுரேஷ், ரவி ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
#நில மோசடி  # அரசு அதிகாரிகள்  # கைது 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..