சமூக வலைதளங்களில் திராவிட மாடல் நிர்வாகம் குறித்து எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்..!

சமூக வலைதளங்களில் திராவிட மாடல் நிர்வாகம் குறித்து எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்..!
By: TeamParivu Posted On: October 16, 2022 View: 94

சமூக வலைதளங்களில் திராவிட மாடல் நிர்வாகம் குறித்து எழும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

சென்னை திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் எழும் நியாயமான கேள்விகளுக்கு #UngalilOruvanAnswers தொடரில் பதிலளிக்கிறேன்.

கேள்வி: திமுக பாஜகவோடு சமரசமாக போய்விட்டதாக சொல்கிறார்களே? பதில்: இப்படி சொல்வதை பாஜகவே ஏற்காது. 

கேள்வி: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா? பதில்: முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. காலதாமதத்தால் நடக்காது என நினைக்காதீர். நீட் தேர்வில் மிகப்பெரிய சமூக அநீதியை பாஜக அரசு செய்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் அதற்கு பாடம் புகட்டுவதாக அமையும்.

கேள்வி: சாலைகளை எப்போது தான் சரி செய்வீர்கள்? மழைநீர் வடிகால் பணிகள் எப்போது முடியும்? பதில்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை. சென்னையை மீளூருவாக்கம் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடப்பதால் சிரமங்கள் ஏற்படுகிறது. மழைக்கு முன்பு வடிகா பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
கேள்வி: ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனை என்ன? சவால் என்ன? பதில்: மக்கள் முகங்களில் காணக்கூடிய புன்னகைதான் என் சாதனை. நிதி நெருக்கடிதான் மிகப்பெரிய சவால். 

கேள்வி: நாடாளுமன்ற தேர்தல், திமுக பங்களிப்பு என்ன? 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? பதில்: 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு. சமூக நீதியில், கூட்டாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமையும் என்பது நமது இலக்கு. இதற்கான நடவடிக்கைகளை திமுக எடுக்கும்.

கேள்வி: 2-வது குறையாக திமுக தலைவராக தேர்வாகி உள்ளீர்கள், கட்சியை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் உள்ளதா? பதில்: இனி தமிழ்நாட்டை திமுக தான் ஆளூம் என்கிற நிலை இருக்க வேண்டும். என்னிலிருந்து கடைகோடி தொண்டன் வரை இந்த லட்சியத்திற்காக உழைக்க வேண்டும்.

Tags:
#UngalilOruvanAnswers  # முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..