தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி திட்ட முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடனுதவி திட்ட முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
By: TeamParivu Posted On: October 17, 2022 View: 78

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம்  ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு சுமார் ரூ.100 கோடி அளவில் கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ஆம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு சிறுபாள்மையினார். பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு ரூ.93 இலட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு சுமார் ரூ.100 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23ஆம் நிதியாண்டிற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு ரூ.1.00 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட உள்ளது.

டாம்கோ மூலம் செயம்படுத்தப்படும் கடனுதவித் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டுவருமாளம் ரூ.1,20,000 மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000/. வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விதத்தில் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு 1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின் மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00.000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், கீழ் மாணவர்களுக்கு 8% பாணளியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ. 30,00,000 வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே சென்னை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள், கிறிஸ்துவ இஸ்லாமிய சீக்கியர், புத்த, பார்சி, சமண மற்றும் ஜெயின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் பேற்படி சிறப்பு முகாம்களில் கலந்துக் கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன், சார்ந்துள்ள சாதி சான்று, ஆதார் அட்டை வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறிந்த விவரம், திட்ட அறிக்கை ஒட்டுநர் உரிமம் போக்குவரந்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட பேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது, செலான் (original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேப்பாட்டுக் கழகம் படாப்செட்கோ தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருந்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொது காலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ 15 இலட்சம் வரையிலும், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் மற்றும் ஆடவர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரையிலும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 இலட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.மேலும் இரு கறவை மாடுகள் வாங்க ரூ.50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது. கடன் பெற விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினார் நல அனுலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

டாம்கோ, பாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான தொகை பெற விண்ணப்பங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் வட்டம் வாரியாக கீழ் குறிப்பிட்டுள்ள தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் 18.10.2022 அன்று நடைபெறுகிறது. பெரம்பூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல் ஆகிய இடங்களில் 19.10.2022 அன்று நடைபெறும். புரசைவாக்கம், எழும்பூர், மயிலாப்பூர், மாம்பலம் ஆகிய இடங்களில் 20.10.2022 அன்று நடைபெறுகிறது என்றும் கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் 21.10.2022 அன்று நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இச்சிறப்பு முகாம்களில் கலந்துக் கொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவர் அனைவரும் டாப்செட்கோ, டாம்கோ மூலம் கடன் பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் க. அமிர்தஜோதி, இ.ஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:
#தமிழ்நாடு  # சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம்  # கடனுதவி திட்ட முகாம் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..