தொடர் விடுமுறை காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!

தொடர் விடுமுறை காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்..!
By: TeamParivu Posted On: October 24, 2022 View: 69

தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்ததால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வட சென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள,  முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்,  தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக மின் தேவை குறைந்ததால் 2வது நிலையில் உள்ள 1வது அலகில் மேற்கொண்டு வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:
#மின் உற்பத்தி  # தீபாவளி விடுமுறைகள்  # மெகாவாட் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..