July 14, 2023  


ஸ்ரீஹரிகோட்டா: ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்தபடி எல்.எம்.வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்.எம்.வி 3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவியது. இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது. ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு அக்.22ம் தேதி நிலவுக்கு சென்ற சந்திரயான்-1 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தெரிவித்தது. இதன் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை. இதனையடுத்து, 4 ஆண்டுகள் கழித்து இப்போது சந்திரயான்-3 விண்கலம் இன்று நிலவை நோக்கி பயணத்தை தொடங்குகிறது. சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை துல்லியமாக ஆராய்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதனை ஒரு பாடமாக கொண்டு அதன் மூலமாக எந்த வித இடர்பாடுகளும் சந்திரயான்-3 விண்கலத்தில் ஏற்படாத வண்ணம் வடிவமைத்துள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 2.35 மணிக்கு பூமியில் இருந்து புறப்பட்ட எல்.எம்.வி 3 ராக்கெட் 173 கி.மீ உயரத்தில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும். அதன் பின்னர், அங்கிருந்து சுற்றுவட்ட பாதையில் 36,500 கி.மீ தூரம் வரை விண்கலம் அனுப்பப்படும். இதன் பிறகு, உந்து இயந்திரம் ராக்கெட் போல் செயல்பட்டு சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும். ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் நிலவில் தரையிறங்கும். இந்த ரோவர் நிலவில் எந்த பிரச்னைகளும் இல்லாமல் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ரோவரில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக நிலவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எல்லாம் பூமிக்கு வந்து சேரும். அதேபோல, இதில், இரண்டு ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் ரோவர் நிலவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சாம்பிள்களை எடுத்து ரோவரிலேயே ஆராய்ச்சி செய்து அந்த முடிவுகளை பூமிக்கு அனுப்பி வைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் பூமியில் உள்ள விஞ்ஞானிகள் நிலவில் உள்ள விஷயங்கள் குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதற்காகவே சந்திரயான்-3 நிலவுக்குக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஹரிகோட்டா: ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்தபடி எல்.எம்.வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய வ ...View More

எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் ₹45 கோடி மதிப்பில் புதிய விடுதி கட்டும் பணி: முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, ஜூலை 13: சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், ரூ.44.50 கோடி மதிப்பீட் ...View More

ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவை: சாகச விரும்பிகள் உற்சாகம்

ரோம் : ஸ்விட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவையை பயன்படுத்த சுற் ...View More

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..